ஹெரோயின் விற்பனை!! -இரு சகோதரிகள் கைது- - Yarl Thinakkural

ஹெரோயின் விற்பனை!! -இரு சகோதரிகள் கைது-


மிக நீண்ட காலமாக ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட இரு சகோதரிகள் பொலிஸரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பாணந்துறை பொலிஸார் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இரு பெண்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 கிராம் ஹெரோயின் மீட்க்படப்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தை சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சகோதரிகளிடமிருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் வங்கி கணக்கு புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post