தமிழீழ வைப்பகத்தின் நகைகள் எங்கே? -மஹிந்த மீது சிறிதரன் சீற்றம்- - Yarl Thinakkural

தமிழீழ வைப்பகத்தின் நகைகள் எங்கே? -மஹிந்த மீது சிறிதரன் சீற்றம்-


தமிழீழ வங்கிகளில் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை மஹிந்த அரசே அபகரித்தது. அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பதை அவரே வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரியுள்ளார். 

பாராளுமன்றத்தில் நடந்த மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரியுளளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

மத்திய வங்கியின் கீழ் உள்ள நுண் கடன் நிறுவனங்கள் எதுவும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவில்லை. யுத்தத்திற்கு பின் வட,கிழக்கில் உள்ள தொழிற்சாலைகள் இராணுவ மயமாக்கப்பட்டு முடக்கப்பட்டிருக்கின்றன.

மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பார்க்கும் இடமெல்லாம் வங்கி நுண் கடன்களே இருக்கின்றன.

சேவை துறையே இங்கெல்லாம் முதன்மையாக்கப்பட்டு, மக்களின் பணம் தந்திரோபயாகமாக உரிஞ்சிப்படுகின்றது. இதனால் பொருளாதாரம் மங்கி வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழ வைப்பகம் இருந்தது. இதில் தமிழ் மக்கள் பலர் தங்க நகைகள், பணங்களை முதலீடுகளை செய்திருந்தார்கள். இந்த நகைகளுக்கு என்ன நடந்துள்ளது. இப்போதும் தமிழ் மக்கள் அதற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள்.

புலம்பெயர் தமிழர்களின் பணத்தை சூறையாட வேண்டும் என்ற ஒரே நோக்கமே அரசிடம் உள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை மஹிந்த அரசே அபகரித்தது.

இன்றும் அந்தத் தங்கங்கள் அனைத்துமே அரசிடம் உள்ளன. ஏன் இதனை மீண்டும் எமது மக்களுக்குக் கொடுக்க முடியாது.

அந்தத் நகைகளுக்கு என்ன நடந்தது? அரசு அபகரித்ததை மீண்டும் தமிழர்களுக்குக் கொடுக்கத் தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

Post a Comment

Previous Post Next Post