கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீர் மரணம்!! - Yarl Thinakkural

கொரோனா தனிமைப்படுத்தலில் இருந்தவர் திடீர் மரணம்!!


நுவரெலியவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திடீரென உயிரிழந்துள்ளார். 

ஜா எல-கொடுகொட பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதான இவர் கடந்த மாதம் 31 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து தாயகம் திரும்பியிருந்தார்.

காலில் ஏற்பட்டிருந்த காயம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றின் காரணமாக இவர் கடந்த 2 ஆம் திகதி நுவரெலிய அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், இவர் இலங்கை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நுவரெலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post