நாய்கடிக்கு தடுப்பூசி போட்டவர் திடீர் மரணம்!! -வவுனியா வைத்தியசாலையில் குளப்பம்- - Yarl Thinakkural

நாய்கடிக்கு தடுப்பூசி போட்டவர் திடீர் மரணம்!! -வவுனியா வைத்தியசாலையில் குளப்பம்-


வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் நாய் கடித்ததற்காக தடுப்பூசி போட்டுவிட்டு வீடு திரும்பியவர் திடீரென உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் வவுனியா புளியடி பகுதியை சேர்ந்த சிவபாலன் (வயது 49) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார். 

அவருக்கு வைத்யதிசாலையில் தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருது:- 

வவுனியா மகாறம்பைக்குளம் புளியடிபகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் கடந்த 2 நாட்களிற்கு முன்பாக நாய்கடிக்கு இலக்காகியுள்ளார்.

இந்நிலையில் அதற்கான தடுப்பூசியை போடுவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்று தடுப்பூசியை போட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். 

வீட்டிற்கு வந்தநிலையில் அவருடைய உடல் திடீரென சேர்வடைந்துள்ளது. இதனால் உடனடியாகவே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த மரணம் தவறுதலான தடுப்பூசி ஏற்றப்பட்டமையாலேயே மரணம் சம்பவதித்ததாக மரணமடைந்தவரின் உறவினர்கள் வைத்தியசாலையில் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக திடீர் மரணவிசாரணை அதிகாரி சி.கிசோர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post