நபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்!! -நிதி மோசடியில் தேடப்படுபவராம்- - Yarl Thinakkural

நபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸ்!! -நிதி மோசடியில் தேடப்படுபவராம்-


பாரிய நிதி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்படும் நபர் ஒருவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

கோன்வெவ வீதி எப்பாவெல பகுதியை சேர்ந்த ஹேரத் முதியன்சலாகே சமத்குமார ஹேரத் என்பவருடைய புகைப்படத்தினையே பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

இதன் ஊடாக குறித்த நபரை கைது செய்ய பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியள்ளனர்.

குறித்த நபர் 2019 ஆம் ஆண்டு 65 இலட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

குறித்த நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 025-222 6014 என்ற தொலைபேசி இலகத்திற்கு அறியத்தருமாறு காவல் துறையினர் அறிக்கை ஒன்றினை விடுத்து கோரியுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post