பழங்காலத்து வாள்கள்!! -விற்க முற்பட்டவர் யாழில் கைது- - Yarl Thinakkural

பழங்காலத்து வாள்கள்!! -விற்க முற்பட்டவர் யாழில் கைது-


யாழ்ப்பாணம் இளவாலை – வடலியடைப்பு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பான பழமைவாய்ந்த 4 வாள்பகளுடன் ஒருவர் நேற்று இரவு விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைத்த விசேட அதிரடி படையினர், சான்றுப் பொருட்களான வாள்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

பல ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட பழமைவாய்ந்த வாள்களை விற்பனை செய்யவதற்கு குறித்த நபர் முயற்சித்ததாக விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதன்படி குறித்த நபரின் வீட்டினை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வாள்களை மீட்டுள்ளனர். 

Post a Comment

Previous Post Next Post