பாடசாலைகள் ஆரம்பம்!! -கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்- - Yarl Thinakkural

பாடசாலைகள் ஆரம்பம்!! -கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்-


கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழமை போல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.   

செப்டெம்பர் 2 ஆம் திகதி தொடக்கம், 6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழக்கம் போல் ஆரம்பமாகியது.

ஆரம்ப வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளை பாடசாலைக்கு வருவார்கள் எனவும் கல்வி நடவடிக்கைகள் வழமைப் போல நாளை முதல் ஆரம்பமாகும் என  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post