கண்டியில் ஏற்பட்டது நில அதிர்வுதான்!! -உறுதிப்படுத்திய புவியியல் ஆய்வு, சுரங்க பணியகம்- - Yarl Thinakkural

கண்டியில் ஏற்பட்டது நில அதிர்வுதான்!! -உறுதிப்படுத்திய புவியியல் ஆய்வு, சுரங்க பணியகம்-


நாட்டின் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை காலை மற்றும் கடந்த 29 ஆம் திகதி சிறிய அளவிலான நில அதிர்வே ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தகவல் தெரிவித்துள்ளது.

மஹகந்தராவ பகுதியில் உள்ள ஆய்வகத்தில் இந்த நில அதிர்வு சிறிய அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நில அதிர்வானது நில எல்லைகளுடன் தொடர்புப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் மேலதிக ஆராய்வுகளை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் அதிகாரிகள் 6 பேரை கொண்ட இரு குழுக்கள் மேற்கொண்டு வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post