“சரஸ்வதி பிறீமியர் லீக்” -சம்பியனாகியது சரஸ்வதி லயன்ஸ்- - Yarl Thinakkural

“சரஸ்வதி பிறீமியர் லீக்” -சம்பியனாகியது சரஸ்வதி லயன்ஸ்-


யாழ்ப்பாணம் அரியாலை சரஸ்வதி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சரஸ்வதி சனசமூக நிலையத்தின் அனுமதியுடன் நடந்த “சரஸ்வதி பிறீமியர் லீக்” தொடரின் முதலாவது பருவகாலத்தில் சரஸ்வதி ஸ்பாட்டன்ஸ் அணியினை 67 ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனாகியது சரஸ்வதி லயன்ஸ்.      

நேற்று 6 ஆம் திகதி ஞாயிற்று கிழமை சரஸ்வதி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சரஸ்வதி லயன்ஸ் அணி பத்து பந்து பரிமாற்றங்கள் நிறைவில்  97ஃ6 (10) அம்பிகைதனேசிகள்-31 ஓட்டங்களை பெற்று கொண்டது.

பதிலுக்கு 98ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சரஸ்வதி ஸ்பாட்டன்ஸ் அணி லயன்ஸ் அணி வீரர்களின் பந்துவீச்சுக்க எதிர்கொள்ள முடியாது வெறும் 30 ஓட்டங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 67ஓட்டங்களால் தோல்வியடைந்தது.  

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக லயன்ஸ் அணியின் தலைவர் அம்பிகைதனேசிகன் தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் நயகனாக ஸ்பாட்டன்ஸ் அணி வீரன் லக்‌ஷன் தெரிவு செய்யப்பட்டார்.


Post a Comment

Previous Post Next Post