யுத்தத்திற்கு பின் வடக்கு கிழக்கில் நுண்நிதி கடகள் மக்களை தற்கொலைக்குள் தள்ளுகின்றன என்று அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடந்த மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
30 வருட பொருளாதார தடையினாலும் யுத்தத்தினாலும் சிதைக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் ஏனைய பகுதிகளுடன் இயல்பான போட்டியிடலுக்கு முடியாத அளவுக்கு பலவீனபடுத்தப்பட்டுள்ளது.
மத்தியவங்கி அறிக்கையின்படி 2015 ஆண்டு தொடக்கும் 2020 ஆண்டு வரையான பொருளாதார சீர்கேடுகள் மட்டுமே இந்த ஒத்திவைப்பு பிரேரணை மூலம்பேசப்படுகிறது.
ஆனால் உண்மையில் வடக்கு கிழக்கு மக்களின் 30 வருட பொருளாதார நிலை இதை விட மோசமானது.
அரசினால் வடக்கு கிழக்கில் விதிக்கப்பட்ட கொடூரமான பொருளாதார தடையினாலும் யுத்தத்தினாலும் தமிழ் மக்களின் பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.
யுத்தத்திற்கு பின் மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாகவும் நிதியமைச்சராகவும் இருந்த காலப்பகுதியில் தான் நுண்நிதி நிறுவனங்கள், காளான்களை போல வடக்கு கிழக்கில் ஊருருவின.
கொடூராமான யுத்தத்தினையும் கொடுமையான பொருளாதார தடையினையும் தாக்குபிடித்த தமிழ் வர்த்தகர்கள் இந்த நுண்கடன் நிறுவனங்களின் மீள முடியா கடன் பொறியினால் பெருமளவில் தற்கொலையை நோக்கி தள்ளப்பட்டார்கள்.
30 வருட யுத்தத்தால் நலிவடைந்த வடகிழக்கு தமிழர்களின் பொருளாதாரத்தை பாதுகாக்கின்ற அல்லது முன்னேற்றுகின்ற எதுவித பொறிமுறையும் இல்லாது, நாட்டின் ஏனைய பகுதிகளுடன் பொருளாதார ரீதியில் போட்டியிட அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் என்றார்.
Post a Comment