பிரபாகரனை நேரில் காண ஆசைப்பட்ட மஹிந்த!! - சர்ச்சையை கிளப்பும் சிவாஜிலிங்கம் - - Yarl Thinakkural

பிரபாகரனை நேரில் காண ஆசைப்பட்ட மஹிந்த!! - சர்ச்சையை கிளப்பும் சிவாஜிலிங்கம் -


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை பயங்கரவாதிகள் என்று கூறும் மஹிந்த ராஜபக்ச ஏன் சர்வதேச உதவியுடன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க விருப்பினார் என்பதை சொல்ல தயாரா என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் முறப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். 


யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வ ளித்தமையை கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த பெருமை இலங்கைக்கு உரித்தாகுமென நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

அவருடைய இக் கருத்து தொடர்பில் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகள் கொடிய பயங்கரவாதியாக இருந்தால் ஏன் 2005 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்கிம் ஊடாக தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்திக்க விரும்பினீர்கள்.

அத்தோடு கடந்த 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அப்போதைய நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை செய்திருந்தார். 

புலிகள் பயங்கரவாதிகள் என்றால் ஏன் தலைவரை சந்திக்கவும், போர்நிறுத்த உடன்படிக்கையையும் செய்தீர்கள்?

அத்தோடு இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனை பாராட்டுகிறார்கள் எனவும் நான் கேட்க விரும்புகிறேன் என்றார்.

Post a Comment

Previous Post Next Post