கொக்குவிலில் ஹெரோயின் விற்பனை!! -இளைஞரை மடக்கிப்பிடித்த எஸ்.ரி.எவ்- - Yarl Thinakkural

கொக்குவிலில் ஹெரோயின் விற்பனை!! -இளைஞரை மடக்கிப்பிடித்த எஸ்.ரி.எவ்-


யாழ்.கொக்குவில் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள், தராசு, 1,530 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளமதக விசேட அதிரடி படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். 


கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் வியாபாரம் இடம்பெற்று வருவதாக விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அவ்வாறு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கொக்குவிலில் பகுதியல் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 


அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் அவருடைய வீட்டில் இருந்து 13 கையடக்கத் தொலைபேசிகளும்,தராசு ஒன்றும்,1530 மில்லிக்கிராம் கெரோயினும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் மீட்கப்பட்ட பொருட்களையும் விசேட அதிரடிப்படையினர் கோப்பாய் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


சந்தேக நபரையும் பொருட்களையும் பொறுப்பேற்றுக்கொண்ட கோப்பாய் பொலிசார் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post