மாவா பாக்குடன் கைதான மகன்!! - தாய் ஏசியதால் விஷமருந்தி மரணம் - - Yarl Thinakkural

மாவா பாக்குடன் கைதான மகன்!! - தாய் ஏசியதால் விஷமருந்தி மரணம் -


யாழ்.கோப்பாயில் மாவா போதைப் பாக்குடன் கைதான மகனை தாயார் ஏசியதால் மன விரக்தியடைந்த அவர் விஷம் அருந்தி உயிரைமாய்த்துள்ளார். 

கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த குகதாஸ் தினேஷ் (வயது 18) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் மத்தியப் பகுதியில் வசித்து வரும் குறித்த இளைஞன் கடந்த மாதம் 12 ஆம் திகதி மாவா போதைப் பொருளுடன் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

விடுவிக்கப்பட்ட வீட்டிற்கு வந்த அவரை தாயார் ஏசியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த குறித்த இளைஞன் மறுநாள் வீட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள வாழை தோட்டத்தில் வைத்து விஷமருந்தியுள்ளார். 

உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post