மோட்டார் சைக்கிலுக்குள் கஞ்சா!! -விற்க யாழ் நகரில் நின்றவர் கைது- - Yarl Thinakkural

மோட்டார் சைக்கிலுக்குள் கஞ்சா!! -விற்க யாழ் நகரில் நின்றவர் கைது-


யாழ்.நகர் பகுதியில் 248 கிராம் கஞ்சாவுடன் 46 வயதுடைய குருநகரை சேர்ந்த நபர் ஒருவர் மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ்  நகரப் பகுதியில் விற்பனைக்கு தயாராக தனது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை மறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை சான்றுப் பொருட்களுடுன் நீதிமன்றத்தில் முற்படுத்தநடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான அணியினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post