யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது நடந்துள்ளது. இதன் போது பாற்பண்ணை பகுதியினை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கைதான நபரிடம் இருந்து 65 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டவர் சான்றுப் பொருளுடன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.
Post a Comment