யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டோகா நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில தனங்களுக்கு முன்பு டோகாவிலிருந்து தாயகம் திரும்பிய அவர் தனிமைப்படுத்தல் நிலையமாக உள்ள அநுராதபுரம் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கோரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனை இன்று நடத்தப்பட்டது. குறித்த பரிசோதனைகளின் முடிவுகள் இன்று மாலை கிடைக்கப்பபெற்றிருந்தது.
புரிசோதனை முடிவுகளின்படி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா சிறப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Post a Comment