மாணவனை மூர்க்கமாக தாக்கிய ஆசிரியர்!! -கிளிநொச்சி ரீயுசனில் சம்பவம்- - Yarl Thinakkural

மாணவனை மூர்க்கமாக தாக்கிய ஆசிரியர்!! -கிளிநொச்சி ரீயுசனில் சம்பவம்-


கிளிநொச்சியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது கண்மூடிதனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியர் ஒருவரினாலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சைக்காக தருமபுரம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக  கிளிநொச்சி மாவட்டவைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார்.

குறித்த மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு எதிராக தருமபுரம் பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post