குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு எரிபொருள் கொண்டு சென்ற எண்ணைக் கப்பல் ஒன்று அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கு திசையில் 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாமா அரசுக்கு சொந்தமான கப்பல் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பகுதிக்கு 3 கப்பல்களில் கடற்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
குறித்த கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஏற்கனவே மீட்டுவரப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கப்பலை கண்காணிக்க இலங்கை விமானப்படை பி -200 பீச் கிராஃப்ட் விமானம் அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment