நாளை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!! - Yarl Thinakkural

நாளை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்!!


நாட்டில் உள்ள அனைத்துப் அரச பாடசாலைகளும் நாளை புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. 

இந்நிலையில் நாளை முதல் தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் வழமை போன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் வழமை போன்று பாடசாலை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post