ஹெரோயினுடன் 5 இளைஞர்கள் கைது!! -கொக்குவில் ஆலயத்தருகில் சம்பவம்- - Yarl Thinakkural

ஹெரோயினுடன் 5 இளைஞர்கள் கைது!! -கொக்குவில் ஆலயத்தருகில் சம்பவம்-


யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு நின்றுகொண்டிருந்த இளைஞர்களை பிடித்து சோதனை சேய்துள்ளனர். 

இதன் போது சிலர் ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்து நடத்திய சோதனையில் 210 மில்லிக் கிராம் கொரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post