ஊர் மக்களால் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு!! -3 பேர் கைது: 5 பேர் தப்பியோட்டம்- - Yarl Thinakkural

ஊர் மக்களால் பிடிக்கப்பட்ட வாள்வெட்டுக் குழு!! -3 பேர் கைது: 5 பேர் தப்பியோட்டம்-


யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வாள்வெட்டு, கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 3 பேரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தூர் – சிறுப்பிட்டியில் வைத்து நேற்று முன்தினம் மாலை இவர்கள் கைது செய்யப்பட்டனர். வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் 8 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் சிறுப்பிட்டியில் இருந்து புத்தூர் கலைமதி வீதி ஊடாக மோட்டார் சைக்களில் வந்தனர்.

அச்சமயம் இவர்களை அப்பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்து அச்சுவேலி பொலிஸில் ஒப்படைத்தனர். மற்றவர்கள் தப்பி ஓடிய நிலையில், ஒருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர். 

இந்நிலையில் தப்பிச் சென்ற 5 பேரையும் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post