மது போதையால் விபத்து!! -14 வயது சிறுவன் பரிதாப பலி- - Yarl Thinakkural

மது போதையால் விபத்து!! -14 வயது சிறுவன் பரிதாப பலி-


வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனே இதன் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பூம்புகார் பகுதியில் இருந்து ஈச்சங்குளம் நோக்கி சென்ற உந்துருளி ஒன்று அதே திசையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தை ஏற்படுத்திய உந்துருளியின் சாரதி தப்பி சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது உந்துருளியில் பயணித்த இருவரும் மதுபோதையில் இருந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post