யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸ் வருவதைகூட தெரியாத அளவிற்கு போதை மோகத்தில் கஞ்சா பீடியினை புகைத்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர் இனுவில் கிழக்கு பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் என பொலிஸார் கூறினர்.
வீதி ரோந்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற இளைஞனை பிடித்து விசாரணை செய்த போது அவர் கஞ்சா பீடியினை வைத்து நுகர்ந்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
கைதான நபரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.
Post a Comment