இலங்கையில் திடீரெ பெய்த ஆலங்கட்டி மழை!! -வியப்பில் மக்கள்- - Yarl Thinakkural

இலங்கையில் திடீரெ பெய்த ஆலங்கட்டி மழை!! -வியப்பில் மக்கள்-


நாட்டில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக பலங்கொட கல்தோட்டை, வெலிஓய நகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகளிலேயே இன்று திங்கட்கிழமை மாலை ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

குறித்த பகுதிகளில் கடந்த ஒரு மாத கால வறட்சியின் பின்னர் இன்று அங்கு மழை பெய்துள்ளது. இதன்போது ஆழங்கட்டிகளும் கொட்டியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


இன்று பிற்பகல் 3.30 தொடக்கம் 4 மணி வரையிலான காலப்பகுதியில் இந்த ஆழங்கட்டி மழை பெய்துள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். 

Post a Comment

Previous Post Next Post