மணியின் ஆதரவாளர்களிடம் சரணடையும் பொன்னம்பலம் தரப்பு!! -வீடு தேடிச் செல்லும் பரிதாபம்- - Yarl Thinakkural

மணியின் ஆதரவாளர்களிடம் சரணடையும் பொன்னம்பலம் தரப்பு!! -வீடு தேடிச் செல்லும் பரிதாபம்-


தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஓரம்கட்டப்படும் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை தம்மக்கம் இழுக்கும் நடவடிக்கையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமை ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நடவடிக்கைகளில் நேரடியாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இறங்கியுள்ளனர். 

குறிப்பாக இன்று திங்கட்கிழமை மாலை அரியாலை பகுதியில் வசிக்கும் யாழ்.மாநகர சபையின் உறுப்பினர் ஒருவரின் வீடு தேடிச் சென்ற இருவரும் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு ஆசனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கி, அந்த உறுப்பினரை தம்பக்கம் இழுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

இதுமட்டுமல்லாமல் மற்றுமொரு உறுப்பினர் ஒருவருடைய வீட்டிற்குச் சென்ற அவர்கள் தேர்தல் காலத்தில் மணிவண்ணன் முறைதவறி நடந்து கொண்டுள்ளார் என்பதை எடுத்துக் கூறியுள்ளனார். 

குறிப்பாக அவர்கள் இருவரும் மணிவண்ணனுக்கு எதிரான கருத்துக்களை நம்பும்வகையில் கூறியும், எதிர்வாலத்தில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் முன்னுரிமை அடிப்படையில் தங்களுடன் நிற்பவர்களுக்கே போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்து வருகின்றனர். 

Post a Comment

Previous Post Next Post