புதிய அமைச்சர்களா யார்? -சேர்ந்து தெரிவு செய்யும் கோட்டா, மஹிந்த- - Yarl Thinakkural

புதிய அமைச்சர்களா யார்? -சேர்ந்து தெரிவு செய்யும் கோட்டா, மஹிந்த-

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் சேர்ந்து புதிய அமைச்சர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என பொதுஜனபெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை 12ம் திகதி அல்லது 14 ம் திகதி பதவியேற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சர்களை ஜனாதிபதியும் பிரதரும் மாத்திரம் தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் மாத்திரம் இடம்பெறுவார்கள் என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post