திடீர் இயந்திர கோளாறு!! -வீதியை விட்டு காட்டுக்குள் பாய்ந்த பேருந்து- - Yarl Thinakkural

திடீர் இயந்திர கோளாறு!! -வீதியை விட்டு காட்டுக்குள் பாய்ந்த பேருந்து-

செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இன்று செவ்வாய்க்கிழமை காலை இ.போ.சாபைக்கு சொந்தமான பேருந்து பூவரசன்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ஏன்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் 
இன்று செவ்வாய்கிழமை காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்ற அரசு பஸ் பூவரசன்குளம், சண்முகபுரம் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று இயந்திரக்கோளாறு ஏற்பட்டு வீதியைவிட்டு விலகியுள்ளது.

இதன்போது வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த 2 மாடுகள் உயிரிழந்துள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள் அதிஸ்டவசமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

இவ்விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

Post a Comment

Previous Post Next Post