மனைவியை தீ மூட்டி எரித்த கொடூர கணவன்!! -யாழ் அல்வாயில் சம்பவம்- - Yarl Thinakkural

மனைவியை தீ மூட்டி எரித்த கொடூர கணவன்!! -யாழ் அல்வாயில் சம்பவம்-


வடமராட்சி அல்வாய் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட நிலையில் கடந்த 27 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அல்வாய் வடக்கைச் சேர்ந்த ரூபிகா (வயது 22) என்ற இளம் குடும்பப் பெண்ணே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார். 

குறித்த பெண் உயிரிழந்ததை அடுத்து அவருடைய கணவர் இன்று திங்கட்கிழமை காலை நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குடும்பப் பெண் ஒருவர் கடந்த 4 ஆம் திகதி உடலில் தீ காயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாக கணவர் தீ மூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் 27 நாட்களின் பின்னர் இன்று காலை உயிரிழந்துள்ளார். 

அவரது உயிரிழப்பையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட கணவர் இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் மீளவும் கைது செய்யப்பட்டார்.

இளம் குடும்பப் பெண்ணில் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post