கண்டியில் இன்று புதன்கிழமை நடந்த அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வில் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்பதற்குப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்காமல் தலதா மாளிகைப் பகுதியிலிருந்து வெளியேறிச் சென்றதாக ஆங்கிய இணையத்தளம் ஒன்று தெரிவிக்கின்றது.
இதனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்பாக 40 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், 39 இராஜாங்க அமைச்சர்கள் மட்டுமே பதவிப் பிரமாணம் செய்திருந்தார்கள்.
Post a Comment