பிழையாக எழுதப்பட்ட தமிழை திருத்திய நாமல்!! -மும்மொழி கொள்கைக்கு எடுத்துக்காட்டு- - Yarl Thinakkural

பிழையாக எழுதப்பட்ட தமிழை திருத்திய நாமல்!! -மும்மொழி கொள்கைக்கு எடுத்துக்காட்டு-

விளையாட்டுத்துறை அமைச்சு பதவி வழங்கப்பட்ட நாமல் ராஜபக்ச அனைத்து தரப்பினர்களுக்கும் மும்மொழி கொள்கை தொடர்பில் முன்மாதிரியான செயற்பாடு ஒன்றினை செய்துள்ளார். 

விளையாட்டுத்துறை அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக நாமல் ராஜபக்ச நாளை செவ்வாய்க்கிழமை தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார்.

உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னதாக அமைச்சின் பெயர் பலகையிலுள்ள தமிழ் பிழையை திருத்தி, அமைச்சர் மொழி உரிமைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.

இதுவரை எந்தவொரு அமைச்சரதும் பார்வைக்கு கிட்டாத இந்த தமிழ் பிழையானது, புதிதாக பதவியேற்ற இளம் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் கண்களுக்கு புலப்பட்டுள்ளது.

மும்மொழி கொள்கை இலங்கையில் அமுலில் உள்ளது என்பதனை உறுதிபடுத்தும் வகையில் அவர் தமிழ் மொழியில் காணப்பட்ட பிழையினை திருத்தியுள்ளார். 

Post a Comment

Previous Post Next Post