சாரதியின் கவனயீனம்!! -பறிபோனது முதியவரின் உயிர்- - Yarl Thinakkural

சாரதியின் கவனயீனம்!! -பறிபோனது முதியவரின் உயிர்-

வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

குறித்த முதியவர் வெளிமாவட்டத்திற்கு பயணம் செய்வதற்காக வவுனியா புதிய பேருந்து நிலைய பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது பேருந்து நிலையத்தில் தரித்துநின்ற இலங்கை போக்குவரத்து சபையின் மாகோசாலைக்கு சொந்தமான பேருந்து பின்பகுதி நோக்கி செலுத்தப்பட்ட போது பேருந்தின் பின்பகுதியில் நின்றிருந்த முதியவரை மோதிதள்ளியது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post