தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பிக்கு கட்சிக்காக வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
அக் கட்சியின் வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினரான மயில்வாகனம் என்பவர் வீடொன்றில் ஈ.பி.டி.பி துண்டுப்பிரசுரத்தை விநியோகித்துள்ளார்.
மேலும் ஈ.பி.டி.பி கட்சியின் சின்னமான வீணைக்கு புள்ளடி இடுமாறும், டக்ளஸ் தேவானந்தாவிற்கான விருப்பிலக்கமான 5 ற்கும், ரெமிடியஸ் உள்ளிட்டவர்களுக்கும் விரும்பு வாக்கினை வழங்குமறும் கோரியுள்ளார்.
இது தொடர்பான தெளிவான வீடியோ பதிவு இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
Post a Comment