நல்லூரில் இன்று அதிகாலை நடந்த தீர்த்த திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இருந்து வந்த கணவன், மனைவியே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்றை தீர்த்த உற்சவத்தில் சுவாமி தீர்த்தக் கேணியில் தீர்த்தமாடிக் கொண்டிருந்த போது எழுந்த அரோகரா கோசத்தின் அமளிக்குள் இவர்கள் தங்கச் சங்கிலி திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 2 தங்கச் சங்கிலிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
Post a Comment