யாழில் ஆலய விக்கிரகத்திலிருந்து வடியும் நீர்!! -அதிசயத்தை பார்க்க கூடும் மக்கள்- - Yarl Thinakkural

யாழில் ஆலய விக்கிரகத்திலிருந்து வடியும் நீர்!! -அதிசயத்தை பார்க்க கூடும் மக்கள்-


யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தில் உள்ள விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருகின்றது. 

ஆலயத்தின்  பாலஸ்தாபன கும்பாபிசேகம் இன்று காலை நடைபெறவுள்ள நிலையில் மூலஸ்தான பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளின் விக்கிரகங்கள் கருவூலத்திலிருந்து பாலஸ்தாபன மண்டபத்துக்கு எடுத்துவரப்பட்டு பிரதிஸ்டை செய்யும் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.


இதில் சந்தானகோபாலர், நாகதம்பிரான்,வைரவர் போன்ற விக்கிரகங்களில் இருந்தே நீர் போன்ற திரவம் வடிகிறது.

இதனை அறிந்த பெருமளவான பொதுமக்கள் ஆலயத்துக்குச் சென்று நீர் வடியும் விக்கிரகங்களை பார்வையிட்டு வணங்கிச் செல்கின்றனர்.

Post a Comment

Previous Post Next Post