மணியின் பதவி பறிப்பு: வெளியாட்கள் தலையிட முடியாது!! -கஜேந்திரகுமார் இறுமாப்பு- - Yarl Thinakkural

மணியின் பதவி பறிப்பு: வெளியாட்கள் தலையிட முடியாது!! -கஜேந்திரகுமார் இறுமாப்பு-

விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிரான நடவடிக்கை என்பது உட்கட்சி விவகாரமாகும். அதில் வெளியில் உள்ள எவரும் தலையிட நான் அனுமதிக்கப் போவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

நேற்று தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

மணிவண்ணன் விவகாரம் உட்கட்சி விவகாரம். இதில் வெளியாட்கள் தலையிட நாம் அனுமதிக்க மாட்டோம்.

இது குறித்து பலவிதமாக பேசப்படுகிறது. தேர்தல், பதவிநிலைப் போட்டியென சொல்கிறார்கள். இது எதுவுமே இந்த விடயத்தில் சம்பந்தப்படவில்லை.

25 பேரைக்கொண்ட மத்தியகுழு கூடி இது குறித்து ஆராய்ந்து முடிவெடுத்துள்ளது. அந்த முடிவை மணிவண்ணனிற்கு அனுப்பி விட்டோம். 

மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது தனக்கு கிடைத்ததென மணவண்ணன் உறுதிப்படுத்தினார். ஆனால் அதில் கையொப்பமில்லையென்றார். தலைவர், செயலாளரின் கையொப்பத்துடன் பதிவுத்தபாலில், மத்தியகுழுவின் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

மணிவண்ணனின் பதிலை மத்தியகுழு எதிர்பார்க்கிறது. அது கிடைத்த பின்னர், மணிவண்ணன் விவகாரம் கட்சி உறுப்பினர்களிற்கு பகிரங்கப்படுத்தப்படும். இப்போதைக்கு மணிவண்ணன் விவகாரத்தில் எதையும் பேச முடியாது என்றார்.

Post a Comment

Previous Post Next Post