சசிகலாக்கு நீதி கோரும் போராட்டங்கள் ஆரம்பம்!! -ரவிராஜின் சிலைக்கு முன் இன்று- - Yarl Thinakkural

சசிகலாக்கு நீதி கோரும் போராட்டங்கள் ஆரம்பம்!! -ரவிராஜின் சிலைக்கு முன் இன்று-

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள மாமனிதர் ரவிராஜின் சிலைக்கு கீழ் இன்று சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜிற்கு நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி சசிகலா ரவிராஜின் ஆதரவாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரவிராஜின் சிலைக்கு கருப்பு கொடி போர்த்தி, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

Previous Post Next Post