சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பூனை!! -பொலிஸாரை அதிர வைத்த சம்பவம்- - Yarl Thinakkural

சிறைச்சாலைக்கு ஹெரோயின் கொண்டு சென்ற பூனை!! -பொலிஸாரை அதிர வைத்த சம்பவம்-

வெலிகடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதிகளுக்காக பூனை ஒன்று ஹெரோயின் போதைப்பொருள் கடத்திச் சென்ற சம்பவம் பொலிஸார் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

குறித்த சிறைச்சாலைக்கு முன்னால் உலாவிக்கொண்டிருந்த பூனையொன்றை சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இதன்போது குறித்த பூனையின் கழுத்தில் 1 கிராம் 2 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பூனை சிறையில் உள்ள யாருக்காக ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு சென்றது, அந்த பூனையை தயார் படுத்தி யார் அனுப்பியது என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பூனையை பொரள்ளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலை ஆணைக்குழு சந்தன ஹேகநாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post