யாழ்.ஆவரங்கால் பகுதியில் ஆசிரியை ஒருவருக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் வசித்து வரும் ஆசிரியை ஒருவருக்கு அதே பகுதியினை சேர்ந்தவரும் அருகில் வசிப்பவருமான 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இது தொடர்பில் ஆசிரியை கிராம சேவையாளர் ஊடாக பிரச்சிணையை முடித்து வைக்க முயற்சித்த போதும் குறித்த நபர் தொடர்ச்சியாக ஆசியரிடம் தகாத நடத்தைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் இத்தொல்லைச் சம்பவங்கள் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அச்சுவேலி பொலிஸார் உரியமுறையில் விசாரணையினை முண்ணெடுக்காத நிலையில் தொடர்ச்சியாக மன உளைச்சலுக்கு உள்ளான ஆசிரியை காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிராகாரம் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை அன்றையதினம் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பிணையில் விடுவித்த நீதிவான் வழக்கினை செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
Post a Comment