இராஜினாமா செய்ய அழுத்தமா? -இல்லை என்கிறார் சசிகலா- - Yarl Thinakkural

இராஜினாமா செய்ய அழுத்தமா? -இல்லை என்கிறார் சசிகலா-

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எனக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை என்று மாமனிதர் சசிகலா ரவிராஜ் தொரிவித்தார். 

தென்மராட்சியில் இன்று நடந்த போராட்டம் குறித்த அவருடன் கலந்துரையாடிய போதே மேற்ண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

கட்சியின் தலைமைகளுடன் கதைத்துள்ளேன். இது குறித்து அவர்கள் தான் முடிவு செய்வார்கள். ஆதரவாளர்களின் எண்ணங்களில் தான் எனது வெற்றி வாய்ப்பு குறித்து பேசப்பட்டது. 

இறுதி வரை அவர்கள் நம்பிக்கை பலமாக இருந்த நிலையில் என்னுடைய வாய்ப்பு பின்தள்ளப்பட்ட பெறுபேறு அதிர்ச்சியை தந்தது. இந்த அதிர்ச்சியை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் மத்தியகல்லூரியில் நிகழ்ந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை உள்ளே இறக்கப்பட்டமை குறித்து தான் நான் சுமந்திரன் மீது அதிருப்தி கொண்டேனே தவிர பெறுபேறு குறித்து அவரை நான் குறிப்பிடவில்லை. 

அழுத்தம் பிரயோகிப்பதாக குறிப்பிடப்பட்டமை தவறு அவ்வாறு எனக்கு நடக்கவில்லை. என்னுடைய படத்துடன் குயமந னை பயன்படுத்தப்பட்டு வருவதை முன்பே பொலீசில் முறைப்பாடு செய்துள்ளேன் என்றார்.

Post a Comment

Previous Post Next Post