யாழ்.சுண்ணாகம் அம்பனைப் பகுதியில் வீடு திருத்த வேலையையில் ஈடுபட்ட கட்டட கூலித்தொலிழாளி ஒருவர் கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்பு கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் நவாலி கலையரசி லேனை சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதே வேளை மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment