மாகாண சபை தேர்தல் ஜனவரியில்!! -சில திருத்தங்களும் முன்வைப்பு- - Yarl Thinakkural

மாகாண சபை தேர்தல் ஜனவரியில்!! -சில திருத்தங்களும் முன்வைப்பு-

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுவரும் மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த சில மாதங்களுக்குள் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பெரும்பாலும் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெற வாய்ப்புள்ளது.

இருப்பினும் இவ்வருடத்திற்கான வரவு செலவு திட்டம், க.பொ.த. சாதாரண பரீட்சை மற்றும் கா.பொ.த உயர் தரப் பரீட் சைக் காரணமாக அடுத்த ஆண்டின் முற்பகுதியில் இடம் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தத் தேர்தல் முறையானது மாவட்ட ரீதியாக முன்னைய வாக்குகளின் முன்னுரிமை அடிப்படையின் கீழ் நடைபெறும், அதற்காகத் தேர்தல் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post