யாழ்ப்பாணம் மண்டைதீவில் கடற்படையினரின் தேவைக்காக மக்களின் காணியை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த சுவீகரிப்பு நடவடிக்கையை தடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் கூட்டாக இந்த பங்கெடுத்தன.
மண்டைதீவு 7ஆம் வட்டாரத்தில் உள்ள 4 குடும்பங்களிற்கு சொந்தமான 62 பரப்பு காணியை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்கும் அறிவித்தல், காணி உரிமையாளர்களிற்கு விடுக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை காணி அளவீடு செய்யும் பணிக்காக வந்த நில அளவை திணைக்களத்தினரை வழிமறித்து போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில் காணி உரிமையாளர்களுடன் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அக் கட்சியை சேர்ந்த ஈ.சரவணபவன், பா.கஜதீபன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த க.சுகாஸ், ந.காண்டீபன் மற்றும் ஈ.பி.டி.பி கட்சியின் வேலனை பிரதேசசபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனால் அளவீடு செய்ய முடியாத நிலையில், அளவீட்டிற்கு ஒத்துழைக்கும்படி பொலிசார் கோரினர். எனினும், பொதுமக்களின் காணியை அளவீடு செய்ய முடியாதென போராட்டக்காரர்கள் தெரிவித்ததையடுத்து, காணியை வழங்க சம்மதம் இல்லையென காணி உரிமையாளர்களின் எழுத்து மூல அறிவித்தலைபெற்று, நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்.
Post a Comment