வாக்கு பெட்டிக்கு பாதுகாப்பு!! -புதிய திட்டம் வகுத்த தேசப்பிரிய- - Yarl Thinakkural

வாக்கு பெட்டிக்கு பாதுகாப்பு!! -புதிய திட்டம் வகுத்த தேசப்பிரிய-

தேர்தலன்று இரவு வாக்கு பெட்டிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தேர்தல் அதிகார பகுதியில் தலா 2 பேர் என்ற அடிப்படையில் அனைத்து கட்சிகளுக்கும், வாக்கெண்ணும் நிலையக வளாகத்தில் தமது பிரதநிதிகளை வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார். 

வாக்களிப்பின் பின்னர் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் அல்லது சாலை ஓரங்களில் நிற்பதை தவிர்த்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Post a Comment

Previous Post Next Post