யாழ்ப்பாணம் - கொழும்பிற்கு இடையிலான புகையிரத சேவைகள் இம்மாத இறுதிக்குள் வழமைக்கு திரும்பவுள்ளதாக யாழ் புகையிரத நிலைய பிரதான புகையிரநிலைய அதிபர் எஸ்.பிரதீபன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக குறித்த புகையிரத சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நகர் சேர் கடுகதி புகையிரத சேவை எதிர்வரும் 29, 30, 31 மற்றும் அடுத்த மாதம் முதலாம் ஆம் திகதிகளில் பரீட்சார்த்தமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே ஆசன பதிவுகளை யாழ் புகையிரத நிலையத்தில் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment