யாசகம் பெறும் பெண்களுக்கிடையில் மோதல்!! -ஒருவர் பரிதாப பலி- - Yarl Thinakkural

யாசகம் பெறும் பெண்களுக்கிடையில் மோதல்!! -ஒருவர் பரிதாப பலி-


அநுராதபுரம் நகரை அண்மித்த பகுதியில் யாசகம் பெறும் இரு பெண்களுக்களுக்கிடையில் நடந்த மோதலில் 61 வயதுடைய யாசகம் பெறும் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த பகுதியில் யாசகம் பெறும் 20 வயதுடைய யுவதிக்கும் உயிரிழந்த பெண்னுக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. 

இதன் போது யுவதியால் கடுமையாக தாக்குதலுக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 

கொலை தொடர்பில் 20 வயது யுவதியை கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அநுராதபுரம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post