யாழில் அமைதியான தேர்தல்!! -வன்முறைகள் இல்லை என்கிறார் மகேசன்- - Yarl Thinakkural

யாழில் அமைதியான தேர்தல்!! -வன்முறைகள் இல்லை என்கிறார் மகேசன்-

யாழ்.மாவட்டத்தில் நடந்த வாக்களிப்பின் போது எந்தவித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மத்திய கல்லூரியில் சற்று முன்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை இடம்பெற்று நிறைவடைந்துள்ளது எந்தவித அசம்பாவிதமுமின்றி தேர்தலானது மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளது.

எந்தவித வன்முறைச் சம்பவம் பதிவாகவில்லை அத்தோடு கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இம்முறை அதிகளவான வாக்களிப்பு இடம் பெற்றுக் கொண்டது அதாவது 67.72மூ வாக்களிப்பு பதிவாகி உள்ளது என்றார்.

Post a Comment

Previous Post Next Post