மஹிந்தவுடன் பின்கதவு பேச்சுவாத்தையில் தமிழரசு கட்சி!! -தேர்தலின் பின் இணைவு: வெளிப்படுத்தும் ஊடகம்- - Yarl Thinakkural

மஹிந்தவுடன் பின்கதவு பேச்சுவாத்தையில் தமிழரசு கட்சி!! -தேர்தலின் பின் இணைவு: வெளிப்படுத்தும் ஊடகம்-

பாராளுமன்ற பொது தேர்தல் நடந்து முடிந்த பின் இணைந்து செயற்படுவது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் இடையில் பின்கதவு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளம் மேற்படி தகவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தகவல்களை பெறுவதற்காக சுமந்திரனையும் இலங்கை தமிழ் அரசுக்கட்சியையும் தொடர்புகொண்ட முயற்சித்ததாகவும் அது சாத்தியமாகவில்லை எனவும் எக்கனமி நெக்ஸ்ட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அரசாங்கத்துடன் இணைவது பிராந்தியங்களுக்கு நன்மையளிக்கும் என கிழக்குபல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் டி ஜயசிங்கம் தெரிவித்துள்ளார் என எக்கனமி நெக்ஸ்ட்  தெரிவித்துள்ளது.

கடந்த 25 முதல் 30 வருடங்களில்  அனைத்து அரசாங்கங்களிலும் முஸ்லீம் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளதால் அந்த சமூகம் பலனடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post