தமிழரசு கட்சி வவுனியாவில் கூடியது!! - Yarl Thinakkural

தமிழரசு கட்சி வவுனியாவில் கூடியது!!


இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் ஆரம்பமான இக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மத்திய செயற்குழு கூட்ட அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.Post a Comment

Previous Post Next Post