வைத்தியசாலையில் ஒலிக்கும் எஸ்.பி.பியின் பாடல்!! -வித்தியாசமான சிகிச்சை முயற்சி- - Yarl Thinakkural

வைத்தியசாலையில் ஒலிக்கும் எஸ்.பி.பியின் பாடல்!! -வித்தியாசமான சிகிச்சை முயற்சி-

சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்கு வித்தியாசமான முறையில் சிகிச்சை வழங்கும் நடவடிக்கையினை எடுத்துள்ள வைத்தியசாலை நிர்வாகம் அவரது பாடல்களை அவருக்கு கேட்கும் வகையில் ஒலிக்கவிட்டுள்ளது. 

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

6வது மாடியில் பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் அறையில் ஒலிபெருக்கி மூலம்  பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன.

பாடல்களை கேட்பதால் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நோயில் இருந்து மீளுவார் என இசைப்பிரியர்கள் கூறினர்.

Post a Comment

Previous Post Next Post