புதிய அமைச்சர்கள் யார்!! -பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள்- - Yarl Thinakkural

புதிய அமைச்சர்கள் யார்!! -பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள்-

நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலின் முடிவின் பிரகாரம் புதிய பாராளுமன்றம் நாளை மறுதினம் புதன்கிழமை கூடவுள்ளது.

கண்டி திருமண மண்டபத்தில் அமைச்சரவை பதவி யேற்பு வைபவம் இடம்பெறவுள்ளது. இதில் 26 அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நிதி, வீட்டுவசதி மற்றும் கட்டுமானத் துறைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

கல்வி அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமல் ராஜபக்ச நீர்ப்பாசன அமைச்சராகவும், நாமல் ராஜ பக்ச விளையாட்டு துறை அமைச்சராகவும் நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சராக பவித்ரா வன்னியராச்சி , விவசாய அமைச்சராக மஹிந்தானந்த அளுத்கமகே சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நீதி அமைச்சராக அலி சப்ரி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post